Wednesday 9 December 2015

சிறு தகவல்கள் - வட கிழக்கு பருவமழை எப்படி உருவாகிறது?


வருடந்தோறும் நாமும் ”கேரளாவுல மான்சூன் செட் ஆயிடுச்சு. இனிமே மழை ஆரம்பிக்கும். வட கிழக்கு பருவ மழை பெய்யுது.” இது மாதிரி பேசிக் கொள்வது சகஜம். மழை வருதா இல்லையா? நம் துணிகள் காய்கிறதா இல்லையா? என்பதைத் தாண்டி அது எப்படி உருவாகிறது என்றெல்லாம் நாம் யோசித்ததில்லை.



தென்மேற்கு பருவம்:

தென்மேற்கு பருவப் பெயர்ச்சிக் காற்று இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரை 4 மாதங்கள் வீசும் பருவப் பெயர்ச்சிக் காற்று ஆகும். கோடை காலத்தில் தார் பாலைவனம் மற்றும் அதைச்சுற்றியுள்ள இந்தியாவின் வட, நடுப்பகுதிகள் சூடாவதால் அங்கு குறைந்த காற்றழுத்தம் உண்டாகிறது. அதை ஈடு செய்ய ஈரப்பதம் மிக்க காற்று இந்தியாவின் இந்தியப் பெருங்கடலின்
தென் மேற்கு பக்கத்திலிருந்து அப்பகுதியை நோக்கி வீசுகிறது.இந்தக் காற்று இமயமலைகளில் முட்டி மேலெழுந்து தீபகற்ப இந்தியாவில் மழை மேகங்களை குவிக்கிறது. இம்மேகங்கள் இமயமலையைத் தாண்டமுடியாத நிலையில் மேலே எழுகின்றன. இதனால் வெப்பம் குறைந்து மழையாகப் பெய்கிறது. சூன் 1 ஆம் தேதி கேரளத்தின் முனையில் துவங்கும் இப்பருவ மழை படிப்படியாக முன்னேறி கடலோரக் கருநாடகாவில் ஜூன் முதல்வாரத்திலும் மும்பை மற்றும் கொங்கண் கடற்கரைப் பகுதிகளில் சூன் இரண்டாம் வாரத்திலும் துவங்குகின்றன. தலைநகர் தில்லியில் ஜூலை மாதம் துவங்குகிறது. கொல்கத்தா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஜூன் முதல் வாரத்தில் பருவமழை துவங்குகின்றது. இந்த மழைக்காலத்தில் இந்தியாவில் சில பகுதிகள் 10,000 mm (390 in) வரை மழைநீர் பெறுகின்றன.

தென் மேற்கு பருவ காற்று செல்லும் திசை


வட கிழக்கு பருவம்:

தமிழகத்தில் பெய்த இந்த பெரு மழைக்கு மிகத் தீவிரமான வட கிழக்கு பருவமே காரணம். இந்த பருவ காலத்தில், நாட்டின் வட கிழக்கில் இருந்து, குறிப்பாக வங்கக் கடலில் இருந்து ஆவியான நீருடன் சூடான காற்றை தென் மேற்கு நோக்கி வீசும்.

வட கிழக்கு பருவ காற்று செல்லும் திசை

இதனால் நாட்டின் உள் பகுதிகளில் வான் பகுதிகள் காய்ந்து போய், காற்றளவின் அழுத்தம் குறையும். இந்த அழுத்தம் குறைவான பகுதிக்குள் மேலும் காற்று வந்து சேரும்போது அந்தக் காற்று, ஏற்கனவே வந்து சேர்ந்த நீராவியை குளிர வைத்து, புயலாக மாறி கன மழையைக் கொட்டும். இது தான் வட கிழக்குப் பருவ மழை என்கின்றனர்.

- எல்லோரா விஜயா

No comments:

Post a Comment