பாம்பென்றால் படையும் நடுங்கும். பழைய மொழி தான் என்றாலும் பாம்பின் பாம்புக் கடியின் தீவிரத்தை உணர்த்தக் கூடிய பழமொழி. பாம்புக் கடித்தவர்களை மருத்துவமனையில் அனுமதிக்கும்போது என்ன பாம்புக் கடித்தது என கேட்பதுண்டு. அதனால் சிலர், அடித்தப் பாம்பையும் கையோடு மருத்துவமனைக்கு எடுத்து வருவதுண்டு.
திரைப்படங்களில் கடித்த பாம்பே மனிதனிடமிருந்து தன் நஞ்சை உறிந்து விடுவது போல் காட்டுவதால் மக்களிடம் பாம்பு நஞ்சே நஞ்சுக்கு மருந்தாக செயல்படுவது போல் மூடநம்பிக்கை உள்ளது. உண்மையில் எதற்காக எந்த பாம்புக் கடித்தது என மருத்துவர்கள் கேட்கிறார்கள் எனத் தெரிந்துக்கொள்வோம்.
எல்லா பாம்பு கடிகளுக்கும் "Anti Venum Serum" என்ற ஒரே மருந்து தான் . ஆனால் ஒவ்வொரு பாம்பு ஒவ்வொரு உறுப்பை பாதிக்கும் , சில சமையம் பாதிக்காமலும் இருக்கலாம். உதாரணத்திற்க்கு நல்ல பாம்பின் விஷம் மூளையையும் நரம்புகளையும் பிரதானமாக பாதிக்கும் , Viper பாம்புகள் இரத்த ஓட்டத்தையும் சிறுநீரகத்தையும் முதலில் பாதிக்கும் . சில பாம்களுக்குள் விஷம் இருக்காது (பச்சை பாம்பு) , அதனால் அவர்களுக்கு "Anti venom Serum" தேவைப்படாது . பாம்பின் விஷத்தன்மையை பற்றி அறியவே, மருத்துவர்கள் கொன்ற பாம்பை முடிந்தால் எடுத்து வர சோல்வார்கள் . ஆனால் இது அவசியம் கிடையாது , பாதிக்கபட்டவரை மருத்துவமனைக்கு உடனடியாக அழைத்துச் செல்வதில் முதலில் கவனம் இருக்க வேண்டும் .
No comments:
Post a Comment